| பட்டுப்போகும் முந்திரி கன்றுகள் கம்மாபுரம் விவசாயிகள் கவலை Dinamalar
பட்டுப்போகும் முந்திரி கன்றுகள் கம்மாபுரம் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
01:23

கம்மாபுரம்: கடும் வறட்சியால், பலா, முந்திரி மரக்கன்றுகள் பட்டு போவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கம்மாபுரம் பகுதியில், இருப்பு, பெரியகாப்பான்குளம், முதனை, கோட்டேரி, நடியப்பட்டு, பாலக்கொல்லை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், மழையை நம்பி,10 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் பலா, முந்திரி, மாமரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.இந்நிலையில், பருவ மழை பெய்யாததால், நிலம் வறண்டு, பலா, முந்திரி கன்றுகளும் பட்டுப்போவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'கம்மாபுரம் பகுதியில், ஏரிகளில் தண்ணீர் இருந்தால், வாகனத்தில் தண்ணீர் ஏற்றிச் சென்று, மரக்கன்றுகளை காப்பாற்ற முடியும். நீர் நிலைகள் முற்றிலும் வறண்டதால், பலா, முந்திரி மரகன்றுகள் பட்டுபோவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதித்த விவசாயிகளை கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'என்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X