| இலவச லேப்-டாப் வழங்குவதில் குளறுபடி Dinamalar
இலவச லேப்-டாப் வழங்குவதில் குளறுபடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
23:18

பரமக்குடி : பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லாலேப்-டாப்கள் வழங்குவதில் கல்வித்துறையில் குளறுபடி நீடிக்கிறது.இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் பள்ளியை நோக்கி படையெடுப்பதால் தலைமையாசிரியர்கள் பதில் கூற முடியாமல் திணறுகின்றனர்.



கடந்த ஏப்., மாதத்தில்2017 - 18, 2018 - 19, 2019 - 20 ஆகிய மூன்றாண்டு மாணவர்களுக்கானலேப்-டாப்கள்அந்தந்த பள்ளிக்கு கல்வித்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வந்ததால், லேப்-டாப்களைவழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அனைத்து அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகளிலும் நுாற்றுக்கணக்கான லேப்-டாப்கள் அறைகளில் அடுக்கி பாதுகாப்பாகவைக்கப்பட்டன.தற்போதுஅந்தந்த மாவட்டங்களில்அமைச்சர்கள் மூலம் லேப்-டாப் வழங்கும் விழாநடக்கிறது.2017முதல்தற்போது படிக்கும் மாணவர்கள்வரைநேற்று (ஜூன் 24)லேப்-டாப்கள் வழங்கப்படும் என்றஎதிர்பார்ப்பில் இருந்தனர்.



ஆனால் மாவட்ட கல்வித் துறை சார்பில் முதலில் 2019 - 20ம் ஆண்டுமாணவர்களுக்கு மட்டும் லேப்-டாப் வழங்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும்குறுஞ்செய்திஅனுப்பப்பட்ட நிலையில், பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள்வழங்கினர்.தொடர்ந்து அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரைவழங்க வேண்டாம் என மெசேஜ் வந்ததால், மாணவர்களிடம் இருந்து லேப்-டாப்கள்திரும்ப பெறப்பட்டன.



இதனிடையே2017 மற்றும் 2018 ம் ஆண்டு பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவர்கள் தற்போது பல்வேறு கல்லுாரிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களும் கல்லுாரிக்கு செல்லாமல் லேப்-டாப்களை பெற பள்ளிகளை நோக்கி படையெடுத்தனர்.தொடர்ந்துஅறிவிப்பு வரவில்லை என்ற காரணம் கூறி தலைமையாசிரியர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர்.



ஏற்கனவே பள்ளிகளில் லேப்-டாப்களை பாதுகாக்க திணறி வரும் நிலையில், மாணவர்களை இதுபோன்ற அலைக்கழிக்கும் சூழலை விடுத்து உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் லேப்-டாப்வழங்க வேண்டும் என பெற்றோர்கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X