| பள்ளி அருகே குப்பையில் தீவைப்பு மாணவர்களுக்கு மூச்சு திணறல் Dinamalar
பள்ளி அருகே குப்பையில் தீவைப்பு மாணவர்களுக்கு மூச்சு திணறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
23:21

அபிராமம் : அபிராமம் பள்ளி அருகே குப்பை தொட்டியில்சேரும்குப்பைக்கு தீ வைப்பதால்மாணவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அபிராமம் அருகே நத்தத்தில் 2600 மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி உள்ளது.




பள்ளிக்கு செல்லும் வகையில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து இருந்தாலும், ரோடு அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் ஜல்லி கற்களை தாண்டி பள்ளிக்கு பயணிக்கும் அவலம் உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்வகையில் நத்தம் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் குப்பை தொட்டி அமைக்கபட்டுள்ளது.இந்த குப்பை தொட்டியில் சேகரிக்கப்படும் குப்பையைஅகற்றாமல், தொட்டியிலேயே தீயிட்டு எரிக்கப்படுகிறது.



இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் புகை,துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பை தொட்டி அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புகைமண்டலத்தால் பாதிக்கபட்டுள்ளனர். குப்பை தொட்டியில் சேகரிக்கப்படும் குப்பபையைஅகற்றநத்தம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.---

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X