சிறு குறு விவசாயிகள் சேர முடியாமல் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
23:36

சிவகங்கை : தமிழகத்தில் பட்டா பெயர் குளறுபடிகளால் சிறு குறு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில் ஏற்கனவே நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் 2017 க்குப்பிறகு மத்திய அரசின் பங்களிப்புடன் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



'துளி நீரில் அதிகப்பயிர்' அடிப்படையில் 'பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா' என்ற பெயரில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் மானியம் அளிக்கின்றன. இத்திட்டத்தில் சிறுகுறு விவசாயிகளுக்கு தமிழகத்தில் மட்டும் தான் 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயிருக்கு ஏற்றார்போல் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், மழைத்துாவான் என மூன்று வகைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



சிவகங்கை மாவட்டத்தில் 4507 எக்டேரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கடந்த 3 ஆண்டுகளில் இம் மாவட்டத்திற்காக 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் பாதித்தொகை மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து முழுமையாக விண்ணப்பங்கள் வராததால் இன்னும் 7 கோடி ரூபாய் அப்படியே உள்ளது. மாவட்டம் முழுவதும் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி வருகின்றனர்.



இருந்தாலும் பல விவசாயிகள் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இது தவிர இத்திட்டத்தில் சேர பயனாளியின் பெயரிலேயே பட்டா இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விவசாயிகள் ஆர்வம் காட்டாததற்கு காரணமாக உள்ளது. பல விவசாயிகளின் பட்டா அவர்களின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி என மற்றவர்கள் பெயரிலும் கூட்டுப் பட்டாவாகவும் உள்ளது. இதனால் அந்த விவசாயிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. பட்டா மாறுதல் செய்வதில் பல பிரச்னைகள் இருப்பதால் இத்திட்டத்தில் சேர தயங்குகின்றனர்.



எனவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை எளிய முறையில் அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு செல்ல வசதியாக பட்டா பெயர் குறித்த விதிமுறையில் சலுகை காட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X