| குடிநீர் கேட்டு பெண்கள் அலைச்சல் Dinamalar
குடிநீர் கேட்டு பெண்கள் அலைச்சல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
00:17

ஆர்.கே.பேட்டை, : குடிநீர் வினியோகம் இல்லாததால் அவதிப்பட்டு வரும்பெண்கள், நேற்று காலை, ஒன்றிய அலுவலகத்திற்கு ஆட்டோவில் திரண்டு வந்தனர்.அதிகாரிகள் இல்லாததால், மீண்டும் நாளை வருகிறோம் என, திரும்பி சென்றுள்ளனர்.



ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வரிசையில், தற்போது, வெள்ளாத்துார் ஊராட்சியும் சேர்ந்து கொண்டுள்ளது.வெள்ளாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாகுப்பம் மேடு கிராமத்தில், சில வாரங்களாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படவில்லை.



இதனால், கடும் அதிருப்தியில் இருந்த பெண்கள், நேற்று காலை, ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கினர். நீண்ட நேரம் காத்திருந்தும், வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலகத்திற்கு வராததால், ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர். மீண்டும், நாளை வருவோம், தண்ணீர் கிடைக்கும் வரை எங்களின் பயணம்தொடரும் என, கூறி சென்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X