| தொடர் கொள்ளையில்  ஈடுபட்ட இருவர் கைது  Dinamalar
தொடர் கொள்ளையில்  ஈடுபட்ட இருவர் கைது 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
00:21

ஊத்துக்கோட்டை : மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர், புல்லரம்பாக்கம், வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில், 15ம் தேதி நடந்து சென்ற பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.




வெங்கல் அடுத்த, வெள்ளியூரில் நடந்து சென்ற சந்திரகலா என்ற பெண்ணிடம், முகவரி கேட்பது போது பேச்சு கொடுத்து, அவரை தாக்கி, 8 சவரன் செயினை பறித்துச் சென்றனர். புல்லரம்பாக்கம் பகுதியில், 8 சவரன், மணவாள நகரில், ஆறு சவரன் என, ஒரே நாளில் அடுத்த நேரங்களில், 22 சவரன் நகையை கொள்ளை அடித்துச் சென்றனர்.கொள்ளையர்களை ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் தலைமையில், தலைமை காவலர்கள் ராவ்பகதுார், செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.



கொள்ளையர்கள் அம்பத்துார் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார், இரண்டு பேரை சுற்றி வளைத்து பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சங்கர்பாய், 22, திருமுல்லைவாயல் சரவணன், 23 என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து, ஒரு அப்பாச்சி பைக், 20 சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X