நகர்மலர் ரிப்போர்ட்டர் லீக்ஸ் பகுதிக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:35

ஆற்றை துார்வாரின எம்.பி.,'சபாஷ்' சொன்னாங்க மக்கள்வால்பாறை நகரில் ஆறுகளை துார்வாரும் பிரச்னை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கு. ஆளுங்கட்சியில நிலவும் கோஷ்டி பூசலால், இந்த பணிக்கு அழுத்தம் கொடுக்காம இருக்காங்க.ஆற்றை துார்வார அதிகாரிகள் முன் வந்தாலும், ஆக்கிரமிப்பை அகற்ற ஆளுங்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு தடையாக இருக்காங்க.தேர்தல் பிரசாரத்துல, 'என்னை வெற்றி பெற வையுங்க, இங்குள்ள நீர் நிலைகளை துார்வாரி கொடுக்கறேன்னு' தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் பேசினாரு.தேர்தல்ல ஜெயிச்சதும் வாக்குறுதிய நிறைவேற்றும் வகையில், அரசு நிதியை எதிர்பார்க்காம, சொந்த நிதி ஏழு லட்சம் ரூபா செலவுல ஆற்றை துார்வார ஒரு 'டீம்' அமைத்து, பணிய துவக்கினாரு. தேர்தல் நேர வாக்குறுதியை நிறைவேற்றும் எம்.பி., சண்முகசுந்தரத்துக்கு சபாஷ் சொன்னாங்க.தேர்தல்ல தி.மு.க., ஜெயிச்சாலும், மாநிலத்துல ஆட்சி மாறாததால, பொதுப்பணித்துறை அதிகாரிகள வச்சு, துார்வாரும் பணிய ஆளுங்கட்சி ஆளுக தடுத்தாங்க.'ரெண்டு நாள்ல நாங்களே துார்வாரப்போறோம்னு', எம்.பி., செய்த பணிய அதிகாரிக நிறுத்திட்டாங்க. ரெண்டு வாரமாகியும் அதிகாரிக துார்வாரும் பணிய துவங்கல.உள்ளாட்சி தேர்தலுக்குச.ம.உ., மாஸ்டர் பிளான்பொங்காளியூர் பஸ் ஸ்டாப் அருகே, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த, பெரியவர் ஒருவர், 'என்னப்பா தேர்தல் முடிஞ்சுருச்சு, இப்ப என்ன புதுசா ஆட்கள மாடு கொண்டு போர லாரில ஏத்தீட்டு போறீங்க, என்ன விசேஷம்,' என, ஆளுங்கட்சிக்காரரிடம் கேட்டார்.'அதுவா, ஆனைமலை தாலுகா ஆபீசுல ஜமாபந்தி நடக்குது. அங்க மனு கொடுத்தா, நலத்திட்ட உதவிகள வாங்கித்தர்ரேன்னு சொல்லி, மக்களை மனுக்களோடு அழைச்சுட்டு வரச்சொல்லி, நம்ம ச.ம.உ., சொல்லியிருக்காங்க.அவங்களே சொந்த செலவுல, லாரியும் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்காங்க. மக்கள லாரியில அழைச்சிட்டு போறோம். நீங்களும் வந்து முதியோர் உதவித்தொகைக்கு மனு கொடுங்க, என்றனர்.ஜமாபந்தியில மக்களே அதிகாரிகள சந்தித்து மனு கொடுத்து பிரச்னைக்கு தீர்வு கேட்கலாம். இதுக்கு, ச.ம.உ., எதுக்கு லாரி கொடுத்து அழைச்சுட்டு போகணும், என, முதியவர் கேட்டதும், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்களை சந்திக்க பிளான் பண்ணி வேலை செய்யறாங்க.'சில்லிங்' மாமூலுக்கு ஆர்வம்கைநீட்டும் போலீசாரால் வேதனை'சில்லிங்' சரக்கு விற்கறவங்கிட்ட, மாமூல் வாங்க காட்டற ஆர்வத்தை, திருட்டை தடுக்கவும், போலீஸ்காரங்க காட்டினா பரவாயில்லை,' என, இரண்டு பெருசுகள் குடிமங்கலம் நால்ரோடு பஸ் ஸ்டாப்புல, புலம்பிட்டு இருந்தாங்க. பக்கத்துல உக்காந்து என்ன விஷயம்ன்னு, காது கொடுத்தேன்.குடிமங்கலம் ஸ்டேஷன் லிமிட்டுல எல்லா பக்கமும், சரக்கு 'சில்லிங்' விற்பனை ஜோரா நடக்குது. போலீசும் இதை 'மாமூலா' கண்டுக்கிறது இல்லை.இப்பெல்லாம், வீட்டுல புகுந்து நகை திருட்டு, கோவில் சிலைகள் திருட்டு முயற்சிகள் கிராமத்துல அதிகமாயிருச்சு.இதுக்கு புகார் கொடுக்க போனா,எப்.ஐ.ஆர்., போடறது இல்லை. புகாரை வாங்கினாலும், விசாரணை செய்யறதில்லை.இப்படியே போச்சுனா, பெரிய அளவுல, திருட்டு, கொள்ளை சம்பவங்களும் நடக்கறதுக்கும் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம், திருப்பூர் போலீஸ் உயர் அதிகாரிங்க, கண்காணிச்சு, நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை.வாங்கற சம்பளத்துக்கு மக்களுக்காக கடமையை செய்யணும்னு போலீஸ்காரங்க நினைக்காத வரைக்கும் திருட்டை ஒழிக்க முடியாது. திருடர்களுக்கும் பயம் இருக்காது. அவங்களும் மனசு மாற மாட்டாங்க, இவங்களும் திருந்த மாட்டாங்க, என, நொந்து கொண்டனர்.பள்ளில பிரச்னைனு வந்துட்டா'எஸ்கேப்' ஆயிருவாரு நம்ம ஆபீசர்உடுமலை கல்வி மாவட்டத்துல, கல்வி துறைல, பிரச்னைனு வந்துட்டா ஆசிரியர்கள கைகாட்டிட்டு 'எஸ்கேப்' ஆகற அதிகாரி ஒருத்தரு இருக்காரு, என, ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தகவல் சொன்னாரு.குடிமங்கலம் ஒன்றிய அரசு பள்ளியில், கே.ஜி.,வகுப்புகள் துவக்க, மாவட்ட கல்வி அலுவலகத்தில் வாய்மொழி அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கை நடந்துச்சு.பள்ளி துவங்கும் நாள்ல குழந்தைகளை, வகுப்புல அமர வைப்பதா அல்லது அங்கன்வாடிக்கு அனுப்பறதான்னு பிரச்னை துவங்குச்சு. பெற்றோர் பள்ளி வளாகத்துக்கு வந்துட்டாங்க.பிரச்னைய நீங்களே பேசி முடிச்சுருங்கனு, ஆசிரியர்களுக்கு உயர் அதிகாரி உத்தரவு மட்டும் போட்டுட்டு, ஸ்பாட்டுக்கு வரல. ஒரு வழியா ஆசிரியர்களே பேசி சமாளிச்சுட்டாங்க.'நல்ல பேரு கிடச்சா, 'எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு' முன்னுக்கு வந்தர்ராரு, பணம் கிடைக்கும்னு சொன்னா ஓடி வர்ராரு, அவரால பள்ளில பிரச்னை ஏற்பட்டிருக்குனு சொன்னா ஓடி ஒழிஞ்சுக்கராரு.எங்க சர்வீஸ்ல இப்படி ஒரு ஆபீசரை பார்த்ததே இல்லை. இப்படிப்பட்ட ஆபீசர்ஸ் இருந்தா பள்ளிக் கல்வித்துறைக்கு கெட்ட பேருதான் கிடைக்கும்னு, அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் புலம்பினார். ஆசிரியரிடம் விடைபெற்று, நண்பர் மணிவண்ணனுடன் பைக்கில் கிளம்பினோம்.நுாலக இடத்துல தலையீடுஆளுங்கட்சிக்கு அடுத்த சிக்கல்பொள்ளாச்சியில நண்பர் ஐயப்பன் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்ததேன். அங்கு வந்த எல்லோருக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பை ஊக்குவிக்கிறோம். ஆனா, நுாலக கட்டடம் அபாயகரமா இருக்கறத யாருமே கண்டுக்கறதில்ல, என்றார் நண்பர்.நம்ம ஊருல நுாலகத்துக்கு ஒதுக்குன இடத்துல ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கு. மகாலிங்கபுரம் கூட்டுறவு சங்கத்துல, நுாலகத்துக்கு ஒதுக்கின இடத்தை, அந்த துறையே விற்று காசு பார்த்துட்டாங்க.அந்த இடத்தை நுாலகத்துக்கு திரும்ப வாங்கணும்னு மக்கள் வலியுறுத்திட்டு இருக்காங்க. ஆனா, ஆளுங்கட்சி ஆதரவுல அந்த இடத்த கொடுக்க மறுக்கறாங்க. இடத்தை விற்பனை செய்த கூட்டுறவு சங்க நிர்வாகத்து மேல வழக்கு போடப்போறாங்க.இந்த நேரத்துல, நுாலக இட பிரச்னைய திசை திருப்ப, மாஜி கவுன்சிலர் ஒருத்தருக்கு ஆளுங்கட்சி வி.ஐ.பி., 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காரு.பாலியல் விவகாரத்துல, ஆளுங்கட்சி பேரு ரெம்பவே 'டேமேஜ்' ஆகியிருக்கு. இந்த நேரத்துல, நுாலக இடத்துல மூக்க நுழைச்சு, இளைஞர்கள், மாணவர்கள் எதிர்ப்பை ஆளுங்கட்சி சம்பாதிச்சுட்டு இருக்காங்க, என்றார் நண்பர்.மது மயக்கத்தில் உயர்அதிகாரிநகராட்சி நிர்வாகம் தள்ளாட்டம்வால்பாறை நகராட்சி ஆபீசுல, 'ஸ்கூட்டர்' மானியத்துக்கு விண்ணப்பம் கொடுக்க வந்திருந்த பெண்கள், அதிகாரிகள பத்தி மெய்மறந்து பேசிட்டு இருந்தாங்க.நகராட்சி ஆபீசுக்கு புதுசா வந்திருக்கற உயர் அதிகாரி ஒருத்தரு, எப்போதும் போதையிலேயே மிதக்குறாராம். அவரும் புதுசா வந்ததும், 'மது' மயக்கம் உள்ளவருன்னு, இங்கிருக்கற ஆபீசருக கண்டுபிடிச்சுட்டாங்களாம்.தப்பு பண்ணுற ஒரு சில ஊழியர்கள், உயர் அதிகாரி வீட்டுக்கு காலையிலேயே 'சரக்கு' பாட்டிலோடு போயி, ஆஜராகி விடுறாங்களாம். அவரும், மது மயக்கத்துல வீட்டிலேயே இருந்துக்கறாரு. நகராட்சி நிர்வாகம் கெட்டு குட்டிச்சுவராயிருச்சு.கை நீட்டும் அதிகாரிகளுக்கு ரொம்ப வசதியா போச்சு. வளர்ச்சிப் பணிகளும் நடக்கறதில்ல. கடந்த வாரம் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தள்ளாடிட்டு போயிருக்காரு. பொறுப்பா இருக்க வேண்டிய அதிகாரியே, இப்படி இருந்தா நிர்வாகம் எப்படி நேர்மையா நடக்கும், என, எந்த பெண்கள் பேசிக்கிட்டாங்க.நண்பர்கள், சரவணன், பாபு இருவரும் வந்ததும், நகராட்சியில் இருந்து கிளம்பினோம்.பிளாஸ்டிக் பிடிச்சா; ஆபீசரை துாக்கிருவோம்!பொள்ளாச்சி நகராட்சியில பிளாஸ்டிக் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் காரசாரமாக நடந்தது. மன வேதனையோடு வெளியே வந்த அதிகாரி ஒருத்தரு, இவங்க இப்படி இருந்தா, ஊரு எப்படி உருப்படும் என, புலம்பினார். என்ன நடந்ததுனு விசாரணையை துவங்கினோம்.ஊரும், சூழலும் நல்லா இருக்கணும்னு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் பண்ணுறோம். ரெய்டு போனா வியாபாரி எல்லோரும் ஒன்னு சேர்ந்து போராடுறாங்க; மிரட்டுறாங்க.தி.மு.க., எம்.பி., பிளாஸ்டிக் ஆதரவா களம் இறங்குவோம்னு சொல்லியிருக்காரு. இப்ப என்னன்னா, 'இல்லீகல், லீகல்னு பேசாதீங்க; எல்லாம் எங்களுக்கு தெரியும். எங்க ஊரு மேல எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்குனு கேட்கறாங்க.பிளாஸ்டிக் ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்னு நடவடிக்கை எடுத்தா, கடை அடைப்பு பண்ணுவோம், ஆபீசர்கள இந்த ஊருல இருந்து துாக்கி அடிச்சுருவோம் என, ஏகத்துக்கும் மிரட்டுறாங்க. இப்படி இருந்தா ஊரு எப்படி உருப்படும்னு, சொல்லி முடித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X