| விலை சரிவால் முடக்கம்!தென்னை நார் தொழிலில் சிக்கல்... Dinamalar
விலை சரிவால் முடக்கம்!தென்னை நார் தொழிலில் சிக்கல்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:40

பொள்ளாச்சி:தென்னை நார் விலை சரிந்து வருவதால், நார் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. உற்பத்திக்கு தேவையான மட்டை விலை குறைந்தால் மட்டுமே, நார் தொழில் செய்ய முடியும்; தொழிலாளர்கள் வேலை இழப்பை தவிர்க்க முடியும், என, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, நெகமம் மற்றும் ஆனைமலை பகுதியிலும், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை பகுதியிலும் தென்னை சாகுபடியும், தென்னை நார் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளது.


இப்பகுதிகளில் மட்டும், 350க்கும் மேற்பட்ட இடங்களில் நார் உற்பத்தி செயல்படுகிறது. தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். மேலும், வடமாநில தொழிலாளர்களும் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர்.நார் உலர்த்துதல், உலர்ந்த நார்களை, 30 கிலோ பண்டல்களாக கட்டுதல், லாரிகளில் பாரம் ஏற்றுதல், நார் துகள்களை சேகரித்தல், நார் கட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.நார் உற்பத்திக்கு, மூலப்பொருளாக காய்ந்த மற்றும் பச்சை மட்டைகள் பயன்படுகின்றன. மட்டைகள் பெரும்பாலும், தேங்காய் வியாபாரிகளிடம் இருந்தும், தேங்காய் உரிக்கும் தோப்புகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன.நார் உற்பத்திக்கு தேவையான மட்டைகள், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. சிலர் அங்கேயே நார் உற்பத்தியை துவக்கி, ஏற்றுமதி செய்கின்றனர்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 30 கிலோ எடை கொண்ட பண்டல்கள், 450 - 500 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, பண்டல்கள், 340 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நார் விலை சரிந்து வருவதால், தொழிற்சாலைகளில் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டுள்ளது.நார் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சுதாகர் கூறியதாவது:நார் உற்பத்தியும், விலையும் தொடர்ந்து சரிவை கண்டுள்ளன. ஆண்டின் துவக்கத்தில், 30 கிலோ நார் பண்டல், 450 - 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 340 ரூபாய்க்கு விற்பனயாகிறது.அதனால், நார் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பாதிக்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.நார் விலை படிப்படியாக சரிந்த போதும், மட்டை கொள்முதல் விலை குறையாமல் உள்ளது. தற்போது, கருப்பு மட்டை லோடு, 1,700 ரூபாய், பச்சை மட்டை, 1,900 ரூபாயாகவும் உள்ளது.மட்டைகள் கொண்டு வர, வாடகை செலவு இல்லாமல், தோப்புகளில் ஒரு லோடு மட்டை, 1,400 - 1700 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படுகிறது.உற்பத்தி பாதியாக குறைந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை இழக்காமல் இருக்க, மட்டை விலை குறைந்தாக வேண்டும். இதற்கு, தென்னை சாகுபடியாளர்களும், மட்டை வியாபாரிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே, நார் உற்பத்தி தொழில் நீடிக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X