அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:48

திண்டுக்கல் : 'வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடாக மண் பரிசோதனை செய்து, அதற்கேற்ப பயிரிடலாம்' என, வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கிணற்றுப்பாசன விவசாயிகள் கரீப் (ஜூன் - செப்டம்பர்) ரபி (அக்டோபர் - ஜனவரி) என இரு பருவத்திலும் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். மானாவாரி விவசாயிகள் ரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்கின்றனர்.70 சதவீதத்துக்கும் மேல் மானாவாரி விவசாயமே நடக்கிறது.



சுற்றுச் சூழல் மாசு மற்றும் செயற்கை உரங்களின் தாக்கத்தால் மண்வளம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிறது. எனவே, விவசாய பணிகளை தொடங்கும் முன் மண் வளத்தை தெரிந்து அதற்கேற்ற பயிர்கள், உரங்களை இட வேண்டும், என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.காந்திகிராம பல்கலை மண்ணியல் தொழில் நுட்ப வல்லுனர் திருநாவுக்கரசு கூறியதாவது: மானாவாரி விவசாயிகள் தற்போது நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, துவரை போன்ற 70 முதல் 100 நாள் உள்ள பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். பயறுவகைகளை பயிரிடும்போது அதில் உள்ள வேர்முடிச்சு காற்றில் உள்ள நைட்ரஜனை உட்கிரகித்து தழைச்சத்தை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்தும்.



இதனால் ரபி பருவத்தில் விளைச்சல் அதிகரிப்பதுடன் மண்வளமும் மேம்படும். மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்து அதில் உள்ள சத்துக்களுக்கு ஏற்ப பயிரை தேர்வு செய்ய வேண்டும். காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் குறைந்த கட்டணத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்தி 21 நாளில் முடிவு தெரிந்து கொள்ளலாம், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X