| வழக்கறிஞர்கள் சாலை மறியல் Dinamalar
வழக்கறிஞர்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:50

நிலக்கோட்டை : நிலக்கோட்டை நடுவர் நீதிமன்ற வளாகத்தின் நுழைவிடத்தில் வழக்கறிஞர் சங்க கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தின் முன்பாக வழக்கறிஞர் சங்க தலைவர் வணங்காமுடி தலைமையில் 10 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அவ்வழியாக வேகமாக வந்த மொபட் ஒன்று, வழக்கறிஞர்களை இடிப்பது போல சென்றுள்ளது. ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் மொபட்டில் வந்தவரை துரத்தினர்.




அந்த நபர் மாஜிஸ்திரேட் குடியிருப்புக்குள் நுழைந்தார். வழக்கறிஞர்களும் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த சிலர் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.,பாலகுமாரன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் அவர்களை சமாதானப் படுத்தினர். இதையடுத்து போலீசாரிடம் புகார் செய்தனர். 'அவதுாறாக பேசியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X