| பெண்ணை தாக்கியவர் கைது Dinamalar
பெண்ணை தாக்கியவர் கைது
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2019
08:43
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2019 01:56

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த சின்னவீரையா மனைவி பெருமாயி 35. அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னகாமு 47. இருவருக்கும் இடையே மகளிர் சங்கத்திற்கு பணம் கட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. பெருமாயி, தாயார் கருத்தம்மாள், மகள் முத்தமிழுடன் வீட்டருகே பேசிக்கொண்டிருந்தார்.அங்கு வந்த அன்னகாமு, பெருமாயியை ஒருமையில் பேசி கம்பால் அடித்துள்ளார். தடுக்க வந்த கருத்தம்மாள், முத்தமிழை கையால் அடித்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பெருமாயி அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் அன்னகாமுவை கைது செய்தார்.




 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X