| கண்ணாமூச்சி காட்டுது தென்மேற்கு பருவமழை Dinamalar
கண்ணாமூச்சி காட்டுது தென்மேற்கு பருவமழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:58

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல்சாகுபடிக்கு சிக்கல் எழுந்துள்ளது. தென்மேற்கு பருவழை ஏமாற்றி வருவதால் விவசாயிகள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.



தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியை தாண்டாததே இதற்கு காரணம்.சிக்கல்:பொதுவாக முதல் போக நெல் சாகுபடி ஜூன் முதல் வாரத்தில் துவங்க வேண்டும். தொடர்ந்து 100 நாட்களில் அறுவடை நடைபெறும். அக்டோபரில் இரண்டாம் போகம் துவங்கி ஜனவரிக்குள் அறுவடை முடிந்து போகும். அதிகபட் சம் பிப்ரவரி 10 க்குள் முடியவேண்டும்.இதுதான் நடைமுறை. ஆனால் அணையின் நீர் மட்டம், பருவமழை பெய்யாதது போன்ற காரணங்களால், ஜூன் முதல்வாரத்தில் பெரும்பா லும் முதல் போக நெல் சாகுபடி துவங்குவதில்லை. கடந்தாண்டு ஜூன் 17 ல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.



இந்தாண்டு மழையில்லாததால் சிக்கல் உள்ளது.இன்னமும் எத்தனை நாட்களுக்குள் மழை பெய்தால் முதல் போக நெல் சாகுபடியை துவக்கலாம் என கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறினிடம் கேட்டதற்கு, ''ஜூலை மாதம் 15 வரை காலக்கெடு உள்ளது. அதற்கு பிறகு என்றால் முதல் போக நெல் சாகுபடியை கைவிட வேண்டியது தான். காரணம் வடகிழக்கு பருவமழை பெய்து அறுவடை செய்ய விடாது.



அறிவிக்கப்பட்டபடி ஜூன் 8 ல் துவங்கிய தென்மேற்கு பருவமழையை, வாயு புயல் உருவாகி தான் தள்ளி சென்றது. அதேபோன்று நிகழ்ந்தால் சிரமம் தான். வெயில் அடித்தாலும் நம்பலாம். வானம் மேகமூட்டத்துடன், காற்று அடிப்பது சிக்கலானது. மழை பெய்வதற்கான வாய்ப்பை தள்ளிப்போக வைத்து விடும்.எனினும் ஊற்று தண்ணீரை வைத்து, கம்பத்தில் உத்தமுத்து வாய்க்கால் பகுதியில் நாற்றங்கால் அமைக்க விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X