| இடம் விற்பதாக கூறி பண மோசடி கணவன், மனைவி மீது வழக்கு Dinamalar
இடம் விற்பதாக கூறி பண மோசடி கணவன், மனைவி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:59

ஆண்டிபட்டி : இடம் விற்பதாகக் கூறி ரூ. 19 லட்சத்து 35 ஆயிரம் பெற்று ஏமாற்றிய கணவன், மனைவி மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகஜோதி, தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வருகிறார். இருவரும் தங்கள் வசம் உள்ள 9 சென்ட் இடத்தை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இது குறித்து சக்கம்பட்டியை சேர்ந்த கரிகாலன் என்பவரிடம் ஒரு சென்ட் ரூபாய் 2.15 லட்சம் என்று நிர்ணயித்து முன்பணமாக ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளனர். இரண்டாம் தவணையாக, மீதித்தொகை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரத்தையும் பெற்று ஒப்பந்த பத்திரம் போட்டுள்ளனர். இடத்திற்குரிய இ.சி., சான்று உட்பட மற்ற ஆவணங்கள் சரிபார்த்தபோது இவர்கள் குறிப்பிட்ட இடம் உத்தமபாளையத்தை சேர்ந்த வேறுநபரின் பெயரில் இருந்துள்ளது. இடம் வாங்க கொடுத்த பணத்தை கரிகாலன் திரும்ப கேட்டுள்ளார்.



ராதாகிருஷ்ணன், நாகஜோதி அவதுாறாக திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுவதாகவும் கரிகாலன் ஆண்டிபட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X