| மண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு Dinamalar
மண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:21

கோவை:நீண்ட இழுபறிக்கு பின், கோவை அரசு மருத்துவமனையின் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பாட்டுக்கு வந்தன.கோவை அரசு மருத்துவமனையின் தனிப்பிரிவில் செயல்பட்டு வந்த புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம், 2012ல் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தது.இதையடுத்து இதற்கான புதிய கட்டடம் கட்டவும், உபகரணங்களுக்காகவும், மண்டல புற்றுநோய் மையம் ரூ.5 கோடி செலவில், 4 தளங்களுடன், 40 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டது. மேலும், 12 கோடி ரூபாய் செலவில், நவீன கருவிகள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டன.இந்நிலையில், புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் வகையில் சமீபத்தில், ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மையத்தில் நீண்ட இழுபறிக்கு பின் புதிய அறுவை சிகிச்சை அரங்கு நேற்று திறக்கப்பட்டது.மருத்துவமனையின் டீன் அசோகன் புதிய அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.டீன் அசோகன் கூறுகையில், ''மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களின் சிகிச்சைக்காக, புதிய அறுவை சிகிச்சை அரங்கு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X