| வரி சீராய்வு ஜூலை முதல் அமல் வரி வசூலை பெருக்க முடிவு Dinamalar
வரி சீராய்வு ஜூலை முதல் அமல் வரி வசூலை பெருக்க முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:23

கோவை:கோவை மாநகராட்சியில் கடந்தாண்டு அமல்படுத்த வேண்டிய சொத்து வரி சீராய்வு, வரும் ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது.கோவை மாநகராட்சியில், 4.58 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். தற்போது, பழைய மாநகராட்சி பகுதியில் ஒரு விதமாகவும், இணைக்கப்பட்ட, 11 உள்ளாட்சி அமைப்புகளில், நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு விதமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளில் பின்பற்றுவதை போல், கோவையிலும், மண்டலம் வாரியாக வரி நிர்ணயிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.'ஏ', 'பி', 'சி' என, மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. 'ஏ' மண்டலம் என்றால், பிரதான சாலை, 'பி' மண்டலம் என்றால், குறுக்கு வீதிகள், 'சி' மண்டலம் எனில், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியிலும் உள்ள கட்டடங்களின் சதுரடிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக குடியிருப்புகளுக்கு, 50 சதவீதம், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு, 100 சதவீதம் என வரி சீராய்வு செய்து, 2018, ஏப்., 1 முதல் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.நாளடைவில், இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக, வரி வசூலிப்பதில் குழப்பம் தொடர்கிறது. இதற்கு தீர்வு காண, வரி சீராய்வு நடைமுறை, வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படுகிறது. புதிய கட்டடங்கள் கட்டியவர்களுக்கு, கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவின் கீழ் நிர்ணயிக்கப்படும்.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், ''வரி சீராய்வு நடைமுறை, ஜூலை முதல் நடைமுறைக்கு வரும். புதிதாக வரி விதிப்பு செய்வோருக்கு இந்நடைமுறை பின்பற்றப்படும்.''முந்தைய வரி விதிப்புதாரர்களுக்கு, வரி சீராய்வு செய்வது தொடர்பாக, ஆலோசித்து அமல்படுத்தப்படும். வரி சீராய்வு செய்வதன் மூலம், ரூ.330 கோடி முதல் ரூ.340 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X