வெறிநாய் கடிக்கு வடமாநில வாலிபர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:24

கோவை:வெறிநாய் கடிக்கு முறையாக சிகிச்சை பெறாத, வடமாநில வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சோனு, 35. கோவை இடையர்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர், நாள்பட்ட வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததை அறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறுகையில், ''சோனுவின் உறவினர்களிடம் விசாரித்ததில், ஒன்பது மாதங்களுக்கு முன் சொந்த ஊரில் அவரை வெறிநாய் ஒன்று கடித்ததாக கூறினர். அதற்கு அவர் முறையான சிகிச்சை பெறவில்லை. இதன் காரணமாக நோய் முற்றி, உயிரிழந்துள்ளார்.நாய் கடித்த இடத்தை, சோப்பு மூலம் நன்கு கழுவ வேண்டும். அதன் பின் கிருமி நாசினி அல்லது ஸ்பிரிட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காயத்துக்கு கட்டுப்போட கூடாது.கடித்த சிறிது நேரத்திலேயே, தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை பூஜ்ய நாள் என்பர். இதன்பின், 3,7,14,28 வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X