| வேப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி! நவீன வசதிகளுடன் கட்டித்தர எதிர்பார்ப்பு Dinamalar
வேப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி! நவீன வசதிகளுடன் கட்டித்தர எதிர்பார்ப்பு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2019
04:34
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2019 02:43

வேப்பூர்: தினமும் 50க்கும் மேற்பட்ட பஸ்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் வேப்பூர் பஸ் நிலையத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர்.வேப்பூர் பஸ் நிலையம் 30 ஆண்டுகளுக்கு முன், இரும்பு கம்பிகள், சிமென்ட் மேற்கூரையால் அமைக்கப்பட்டது. சென்னை - திருச்சி நான்கு வழி சாலை, கடலுார் - சேலம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்ட பின், பயணிகள் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.வேப்பூர் வழியாக, திருச்சி, மதுரை, சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, வேலுார், திருவண்ணாமலை, கடலுார், சேலம், கோவை மாவட்டங்களுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
மேலும், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், திட்டக்குடி, பெரம்பலுார் பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு டவுன், புறநகர் பஸ்கள், தனியார் பஸ்கள் செல்கின்றன.இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதற்கான 'ரேக்' வசதியின்றி மண் மேடுகளாக உள்ளது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பொதுக்கழிப்பிடம் முட்புதர் சூழ்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பஸ் நிலைய மேற்கூரைகள் ஆங்காங்கே உடைந்து பயணிகள் நிற்க முடியாத நிலை உள்ளது.இதனால், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். தற்போது, பஸ் நிலையம் அதன் அடையாளத்தை இழந்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. பஸ் நிலையம் மழைக்காலங்களில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.இதனால், பஸ் நிலையத்திற்கு வராமல் சர்வீஸ் சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
அப்போது, பின் வரும் வாகனங்கள் தொடர்ந்து நிற்பதால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அனுப்பப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது.
ஆண்டு தோறும் பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையும், அவர்களின் தேவையும் அதிகரிகிறது.எனவே, வேப்பூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருவாய் அதிகரிக்கும்நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைத்தால், வணிக வளாகம், கழிவறைகள், இருசக்கர வாகன நிறுத்தமிடம் ஆகியவற்றை ஏலம் விடுவதன் மூலம் ஊராட்சியின் வருவாய் அதிகரிக்கும். இதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X