மங்கலம்பேட்டை: சித்தேரிக்குப்பம் - கவணை கிராம இணைப்பு சாலையில், உள்ள செம்மண் தரைப்பாலத்தை அகற்றி, சிமென்ட் பாலம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மங்கலம்பேட்டை அடுத்த சித்தேரிக்குப்பம் - கவணை கிராம இணைப்பு சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.இதனால் இரவில் வரும் வாகனங்கள் தரைப்பாலத்தினை கடக்கும் போது, பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. தற்போது செம்மண் கொட்டி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாதல், மீண்டும் பாலம் துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே, செம்மண் தரைப்பாலத்தை, சிமென்ட பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.