மங்கலம்பேட்டை: மணக்கொல்லையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் நலன் கருதி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது இந்த பயணியர் நிழற்குடை சிமென்ட் காரைகள் பெயர்ந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கிராம மக்கள் மழை, வெயிலில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.