| பலவீனம் அடைந்துள்ள முரட்டு வாய்க்கால் ஷட்டர் Dinamalar
பலவீனம் அடைந்துள்ள முரட்டு வாய்க்கால் ஷட்டர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:45

புதுச்சத்திரம்: வயலாமூர் முரட்டு வாய்க்கால் ஷட்டரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர், பூவாலை, அலமேல்மங்காபுரம், மணிக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மானம்பார்த்தான் வாய்க்கால் மூலம், காவிரிநீரை பெற்று முரட்டு வாய்க்கால் ஷட்டரில் தேக்கி வைத்து, விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது முரட்டு வாய்க்கால் ஷட்டர், சிமென்ட் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. கான்கிரீட் சிலாப் உடைந்துள்ளது.இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, முரட்டு வாய்க்கால் ஷட்டர் இடிந்து விழுந்து, இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உண்டாகும். எனவே இந்த வாய்க்கால் ஷட்டரில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைக்க,நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X