பண்ருட்டி: உற்பத்தி குறைவின் காரணமாக பூண்டு ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.மத்தியபிரதேசம், கர்நாடகா, உ.பி., தமிழகத்தில் ஊட்டி உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு விளைகிறது. கடந்த ஆண்டு சில்லரை விற்பனையில் சிறிய ரக பூண்டுகள் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், லட்டு ரகம் 30 ரூபாய்க்கும், போல்ட் ரகம் 40 ரூபாய்க்கும், ஊட்டி ரக பூண்டு 110க்கும் விற்றது. கடந்த ஆண்டு பூண்டு விலை வீழ்ச்சியால் தெருக்களிலும், மினி வேன்களில் 3 கிலோ 50 ரூபாய் என கூவி விற்பனை செய்தனர். விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பூண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மாற்று பயிர்கள் செய்ததால் உற்பத்தி பெருமளவு குறைந்தது. தற்போது மத்தியபிரதேசம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தேவைக்கு குறைவான அளவில், பூண்டு விற்பனைக்கு வருவதால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ சிறிய ரகம் பூண்டு 80 ரூபாய்க்கும், மீடியம் ரகம் 90, லட்டு ரக பூண்டு 110, போல்ட் ரக பூண்டு 140 ரூபாய்க்கும், ஊட்டி ரக பூண்டுகள் 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இதே நிலை நீடித்தால் 200 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.