| கடலுார் மருத்துவமனையில் மகப்பேறு கட்டடம் திறப்பு Dinamalar
கடலுார் மருத்துவமனையில் மகப்பேறு கட்டடம் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:52

கடலுார்: கடலுார் தலைமை மருத்துவமனையில், ரூ. 20 கோடி மதிப்பீட்டில், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சைப்பிரிவை, முதல்வர் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதி கொண்ட 24 மணி நேர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை அவசர சிகிச்சை பிரிவு, கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.தற்போது இதன் விரிவாக்கமாக, 250 படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு கட்டடம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார்.தரைதளத்தில் பிரவச வார்டு மற்றும் மகப்பேறு, குழந்தைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு இயங்கும். முதல் தளத்தில் குழந்தைகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தைகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவு இயங்கும். இரண்டாம் தளத்தில் நவீன வசதிகளுடன் 5 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மூன்றாம் தளத்தில் பயிற்சி அரங்கம் மற்றும் 100 நபர்கள் உட்கார கூடிய அளவு வசதியுள்ள கூட்டரங்கம் உள்ளது.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் டாக்டர் கலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அபிஷா, மகப்பேறு தலைமை மருத்துவர் சாயலீலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X