| குறை கேட்பு கூட்டம் Dinamalar
குறை கேட்பு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:52

கடலுார்: கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், 420 மனுக்கள் பெறப்பட்டன.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். 420 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் பரிமளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X