| விவசாயியை தாக்கிய வாலிபர்கள் கைது Dinamalar
விவசாயியை தாக்கிய வாலிபர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:54

சிதம்பரம்: கள்ளத்தொடர்பைக் தட்டிக் கேட்ட விவசாயியை தாக்கிய வாலிபர்கள் நான்கு பேரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த மேலதிருக்கழிப்பாலையைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் அசோக்குமார், 38; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் கந்தசாமி, 31. அசோக்குமார் உறவினரான சுந்தரராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராஜாத்திக்கும், கந்தசாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அசோக்குமார், கந்தசாமியிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, நண்பர்கள் சவுந்திரராஜன், 40; அரவிந்தராஜ், 27; கிஷோர்குமார், 18; ஆகியோருடன் அசோக்குமார் வீட்டிற்கு சென்றார். அனைவரும் சேர்ந்து அசோக்குமாரை தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தசாமி, சவுந்திரராஜன், அரவிந்தராஜ், கிஷோர்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X