| டிராக்டர் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம் Dinamalar
டிராக்டர் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:54

கடலுார: கடலுார் முதுநகரில் சவுக்கு கத்தை ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதியதியல் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது.கடலுார் முதுநகர் பகுதியிலிருந்து நேற்று மாலை இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட டிராக்டர் சவுக்கை கத்தை ஏற்றிக்கொண்டு ,கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. முதுநகர் அடுத்த சாலக்கரை அருகே வந்தபோது, டிராக்டரின் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டி கழன்று சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இதனால் டிராஸ்பார்மர் சேதமடைந்தது.அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. முதுநகர் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை செய்தனர். முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மின்வாரிய உழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர். அந்த பகுதியில் 4 மணி நேரம் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X