| பூட்டி கிடக்கும் நுாலகக் கட்டடம் திறக்க நடவடிக்கை தேவை Dinamalar
பூட்டி கிடக்கும் நுாலகக் கட்டடம் திறக்க நடவடிக்கை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:57

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் கிராமத்தில் பொது நுாலக கட்டடம் மூடி கிடப்பதால், அப்பகுதி படித்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட வரஞ்சரம் கிராமத்தில், ஏராளமான படித்த இளைஞர்கள், முதியவர்கள் என பலர் உள்ளனர்.அப்பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2006-07ம் ஆண்டில், பொது நுாலகக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பயன் பெற்றனர்.குறிப்பாக கள்ளக்குறிச்சி நகர் பகுதிக்கு வந்து புத்தகங்கள் மற்றும் அன்றாட நாளிதழ்களை வாங்கி படிக்கும் சூழ்நிலை இருந்து வந்தது. வரஞ்சரம் பகுதியில் நுாலகம் திறந்த பிறகு, அவர்களின் சிரமம் தவிர்க்கப்பட்டது. பலர் நுாலகத்தில் படித்து பயனடைந்தனர்.ஆனால், சில காலம் மட்டுமே திறந்து பயன்பாட்டில் இருந்த நுாலகம் திடீரென பூட்டப்பட்டது. உள்ளே புத்தகங்கள் மற்றும் ரேக்குகள் என்ன ஆனது என தெரியவில்லை. நுாலகம் மூடப்பட்டதால் படித்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மூடிய நுாலகத்தை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X