| அரசு அலுவலக வளாகங்களில் மக்கி வீணாகும் அரசு வாகனங்கள் Dinamalar
அரசு அலுவலக வளாகங்களில் மக்கி வீணாகும் அரசு வாகனங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:57

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு அலுவலர்கள் பயன்படுத்திய பல வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும், அரசு தொடர்பான நிகழ்வுகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்திடும் வகையில், அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் பட்சத்தில், புதிய வாகனங்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கும்போது, பழைய வாகனங்கள் அலுவலக வளாகத்தில் ஓரங்கட்டி நிறுத்தப்படுகிறது.இதனையடுத்து மழை, வெயில் என நாளடைவில் மக்கி வீணாகி வருகிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், அரசு அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் பல ஓரங்கட்டி நிறுத்தப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக மழை, வெயிலில் மக்கி வீணாகி வருகிறது.இதுபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலக வளாகங்களில் பழைய வாகனங்கள் காட்சி பொருளாக உள்ளது.எனவே, மக்கி வீணாகி வரும் பழைய வாகனங்களை மறுசுழற்சிக்கு பயன்படும் வகையில், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X