அடிப்படை வசதியின்றி அரசு பள்ளி ஆசிரியர்களை மிரட்டும் கிராம மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:01

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மூலக்காடு அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை மிரட்டும் கிராம மக்களால் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மூலக்காடு அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பள்ளி பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உண்டு உறைவிட பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்தது.ஆனால், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் கிராமத்தினர் பள்ளி வளாகத்தில் வைக்கோல் போர் அமைத்துக்கொண்டு மாடுகளைக் கட்டி வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி முடியும் முன் இப்பகுதி இளைஞர்கள் பள்ளி வளாகத்தில் கைப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இதனால், மாணவர்கள் படிப்பில் நாட்டம் செல்வதில்லை.மேலும், மாணவிகளை கேலி செய்கின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி நேரத்தில் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கிறது. இதனை ஆசிரியர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை கிராமத்தில் உள்ள ஒரு சிலர் மிரட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.வரும் காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்காக்க பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் அமைத்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X