| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் Dinamalar
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:16

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம், இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.கலெக்டர் சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம், திறன் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளது.விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 28ம் தேதி காலை 10:30 மணிக்கு, திறன் பயிற்சி பயிலரங்கம் துவங்குகிறது. இதில், பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.மேலும், திறன் பயிற்சியின் முக்கியத்துவம், பயன்கள், திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுகின்ற பல்வேறு இலவச பயிற்சிகள், தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் ஆகியவை குறித்து சிறப்புரை நிகழ்த்தப்பட உள்ளன.இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் இளைஞர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X