மாணவர்களை திரட்டி போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
04:09

புதுச்சேரி: 'அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதல் இடங்களை பெற்று தராவிட்டால், மாணவர்களையும், மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் கூறினார்.இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதை புதுச்சேரி மாநிலத்திலும் அமல்படுத்தி இருந்தால், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். இதன் மூலம் ஏழை மாணவ மாணவிகள் பயன் பெற்று இருப்பார்கள்.இதுகுறித்து, கடந்த மே மாதம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், புதுச்சேரி அரசு மக்கள் மீது அக்கறை இல்லாமல் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு, 11ம் தேதி அனுப்ப வேண்டிய கடிதத்தை, 15ம் தேதி அனுப்பியது. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் பறி போய் உள்ளன.பக்கத்து மாநிலமான தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., அரசு உரிய நேரத்தில் கடிதம் அனுப்பி கூடுதல் இடங்களை பெற்றுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு கோட்டை விட்டுள்ளது. புதுச்சேரி அரசின் செயல்பாடு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு துணை போவது போல தோன்றுகிறது. எனவே, இந்த செயலுக்கு பொறுப்பேற்று முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.புதுச்சேரி அரசு மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் இடங்களை பெற வேண்டும். இல்லையென்றால், எங்கள் கட்சி தலைமையின் அனுமதியை பெற்று, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X