இளம் பெண்விஞ்ஞானிக்கு கவர்னர் கிரண்பேடி பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
04:12

புதுச்சேரி: கொய்யாவில் புதிய ரகத்தை உருவாக்கிய இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியை கவர்னர் கிரண்பேடி பாராட்டினார்.புதுச்சேரி, கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீலக்ஷ்மி.31; எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு, கொய்யா சாகுபடியில் அதிக விளைச்சல் காண்பது குறித்து பல்வேறு செயல்முறைகளை கையாண்டு வந்துள்ளார்.இதன் பலனாக, நடவு செய்து இரண்டு மாதங்களில் கனிகளை பறிக்கும் வகையிலான புதிய கொய்யா ரகத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமாக ஒட்டுக்கட்டு மற்றும் மண்கட்டு முறைகளில் செடிகள் வளர்க்கப்படும். ஆனால், 'குளோனன்' என்ற புதிய முறையை கையாண்டு வீரியம் மிக்க கொய்யா ரக செடியை ஸ்ரீலட்சுமி உருவாக்கி உள்ளார்.இவர்,500 வகையான கனகாம்பரம் செடி, 14 வகையான சவுக்கு மரங்களை உருவாக்கி கடந்த 2012 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி,74, மகள் ஆவார். இவர் உருவாக்கிய புதிய கொய்யாவை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், கட்டுப்படுத்தபடும் என்கிறார் ஸ்ரீலட்சுமி. உலகிலேயே முதல்முறையாக 'குளோனன்' என்ற புதிய முறையில் கொய்யாச்செடிகளை உருவாக்கியுள்ள ஸ்ரீலட்சுமிக்கு, ஜெர்மனியைச் சேர்ந்த இன்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டி (international peace university) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியுள்ளது.கொய்யாவில் புதிய ரகத்தை உருவாக்கிய இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியை மத்திய செய்தி தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் குறும்படமாக உருவாக்கி உள்ளது. இதனை இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. கொய்யாவில் புதிய ரகத்தை உருவாக்கிய இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி, அவரது தாயார் விஜயாள்,54; ஆகியோரை கவர்னர் கிரண்பேடி பாராட்டினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X