கடல் காற்று மூலம் சுத்தமான குடிநீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
06:31

சென்னை : கடல் காற்று மூலம், சுத்தமான குடிநீர் தயாரிக்கும் தீவிர முயற்சியில், ஐ.ஐ.டி., பொறியாளர் ஒருவர், 10 நாட்களாக ஈடுபட்டு வருகிறார்.தமிழகத்தில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம், அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.



அவலம்அண்டை மாநிலங்களில், தண்ணீருக்கு கையேந்தும் அவல நிலைக்கு, தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.தண்ணீர் பஞ்சம் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து, தொடர் விழிப்புணர்வு செய்திகளை, நம் நாளிதழ் பிரசுரித்து வருகிறது.இதன் காரணமாக, தன்னார்வலர்கள், பொது நல விரும்பிகள் தாங்களாகவே முன்வந்து, நீர்நிலைகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முனைந்து உள்ளனர்.தமிழக பொறியாளர்கள், தொழிநுட்ப அறிஞர்கள், தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகளை, ஆங்காங்கே யோசித்து வருகின்றனர். காற்றின் மூலம் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம், ஏற்கனவே இருந்தாலும், அதற்கு செலவு அதிகமாக உள்ளது.



அதற்கு மாற்றாக, சென்னை, ஐ.ஐ.டி.,பொறியாளர், ஆனந்த குமார் என்பவர், புது முயற்சியாக, கடல் காற்றில் இருந்து குடிநீர் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளார்.இதற்காக, பாலவாக்கம் கடற்கரையில், ஆய்வகம் அமைத்து, சோதனை முயற்சியில், அவர் ஈடுபட்டு வருகிறார்.பொறியாளர், ஆனந்த்குமார் கூறியதாவது:சென்னை, ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன்.



கல்லுாரியில் படிக்கும் போது, இந்திய அளவிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி நடத்தப்பட்டது.நிதிஅதில், 996 குழுக்கள் பங்கேற்றன. தேர்வு செய்யப்பட்ட சிறந்த, 20 குழுவில் என் குழுவும் ஒன்று. எங்கள் திட்டத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டது.அதனால், புதிய கண்டுபிடிப்புகளில், அதிக ஆர்வம் தோன்றியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றில் ஏற்படும் மாசு அகற்றம் உள்ளிட்ட ஐந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.தற்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல் காற்றில் இருந்து, குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளேன்.




காற்றில் உள்ள ஈரப்பதத்தை, குளிர்வித்து, தண்ணீராக மாற்றுவது தான் இத்திட்டம். கடல் காற்றில் அதிகப்படியான அழுத்தம், ஈரப்பதம் கிடைக்கும் என்பதால், குறைந்த செலவில், நிச்சயம் இத்திட்டம் நல்ல பலன் அளிக்கும். அதற்காக, பாலவாக்கம் கடற்கரையில், 10 நாட்களாக, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.எனக்கு, மீனவ மக்கள், ஒத்துழைப்பு அளித்தனர். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில், தண்ணீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X