| சூரியனை சுற்றி வண்ண ஒளிவட்டம்: வியந்த சேலம் மக்கள் Dinamalar
சூரியனை சுற்றி வண்ண ஒளிவட்டம்: வியந்த சேலம் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:21

சேலம்: வானத்தில் தோன்றிய ஒளி வட்டத்தை, சேலம் மக்கள் பார்த்து வியந்தனர்.


சேலத்தில் நேற்று, 37.4 டிகிரி செல்ஷியஸ் வெயில் சுட்டெரித்தது. இது, இயல்பை விட இரண்டு டிகிரி அதிகம். பாரன்ஹீட் அளவில், 98.6 டிகிரி. அதனால் காலை முதலே, வெப்பத்தின் தாக்கம், புழுக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் காலை, 11:00 மணியளவில் வானத்தில், சூரியனை சுற்றி, வண்ண ஒளிவட்டம் தென்பட்டது. மேலும் ஒளிக்கதிர்களும் வீசின. அதை, சேலம் மக்கள் பலர் வியந்து பார்த்தனர். காடையாம்பட்டி பகுதியிலும், ஒளி வட்டம் உருவானது.


இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஜெயமுருகன் கூறியதாவது: சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றுதலை, 'கோட்டை கட்டுதல்' மழை வருவதற்கான அறிகுறி என, கிராமத்தில் கூறுவர். அறிவியல்பூர்வமாக, மழை வருவதற்கு ஏதுவாக வளி மண்டலத்தில், நீர் மூலக்கூறுகள், பனி துகள்களின் அடர்த்தி அதிகமாகும் போது, அது, சூரிய ஒளியின் மீது பட்டு தெறிக்கும் போது, அதன் பிரதிபலிப்பே இந்த வண்ண ஒளி வட்டம். அதன் அளவு, 22 டிகிரியாக இருக்கும். இது, இரவில் நிலவை சுற்றி தென்படும். ஆண்டுக்கு சராசரி, 60-100 முறை, இந்த ஒளிவட்டம் தோன்றுதல் இயல்பான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார். சேலத்தில் மாலை, 4:00 மணிக்கு துவங்கி, பெய்த சிறு மழையால், 2 மி.மீ., அளவு மழை பதிவாகி உள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X