44 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகள் இடிப்பு: ரூ.36 கோடியில் புதிய கட்டுமானம் விரைவில் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:23

சேலம்: சேலத்தில், 44 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. விரைவில், 36 கோடி ரூபாய் மதிப்பில், 360 குடியிருப்புகள் கட்டுமானப்பணி, ஜரூராக துவங்க உள்ளது.


சேலம், குகை, அல்லிக்குட்டை ஏரி பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், 360 குடியிருப்புகள் அடங்கிய அடுக்கு மாடியை, 15, பிரிவாக தனித்தனியே கட்டி வாடகைக்கு விட்டது. 1974-75ல், கட்டப்பட்ட குடியிருப்புகள், காலபோக்கில் சேதமாகி இடிந்து விழும் அபாயத்துக்கு தள்ளப்பட்டது. எனவே, 44 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளை, அடியோடு இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, 2018, ஆக., 13ல், குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு குடியிருப்புக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 360 குடியிருப்புகளுக்கு, 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், நோட்டீஸ் அனுப்பி குடியிருப்புவாசிகள் அவர்களாகவே வீட்டை காலி செய்த பின், சேதமான குடியிருப்புகள் இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. ஜி.எம்.எஸ்., என்ற ஒப்பந்த நிறுவனம், பொக்லைன், இட்டாச்சி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு, 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவியுடன் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் தலைமையில், பொறியாளர்கள் குழு மேற்பார்வையில் பாதுகாப்பாக, இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


செயற்பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது: பழைய குடியிருப்பு அளவு, 280 சதுரடி. புதிதாக கட்டப்படும் குடியிருப்பு, 400 சதுரடியில் அமைகிறது. வணிக கடைகளும் கட்டப்படுவதால், ஒவ்வொரு பிளாக் அளவும் மாறுபடும். அதிகபட்சம், 10 நாட்களில் இடிப்புப்பணி முடிந்ததும் கட்டுமானம் துவங்கிவிடும். திட்ட மதிப்பீடு, 10 லட்ச ரூபாய்க்குள்ளாகவே, அழகான குடியிருப்பு கட்டப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் முடிந்து, பயனாளிகள் வசம், குடியிருப்புகள் ஒப்படைக்கப்படும். அதேபோல, நேரு நகர், பெரியார் நகர், காந்தி நகர் பகுதிகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட உள்ளன. அதோடு சேர்த்து மொத்த நிதி ஒதுக்கீடு, 97 கோடி ரூபாய். அதில், அல்லிக்குட்டை ஏரி குடியிருப்புக்கு மட்டும், 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X