| இரிடியம் வாங்கி தருவதாக மோசடி: பிடிபட்ட கும்பலிடம் விசாரணை Dinamalar
இரிடியம் வாங்கி தருவதாக மோசடி: பிடிபட்ட கும்பலிடம் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:28

சேலம்: சேலத்தில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி, 55 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, சென்னை, கோவையை சேர்ந்த கும்பலிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரவீண்குமார், 45. இவரை தொடர்பு கொண்ட, கோவையை சேர்ந்த கும்பல், இரிடியத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி தருவதாக கூறி, ஆறு தவணைகளாக, 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது. இதுகுறித்து அவர், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்த புகார் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். மோசடியில், சேலம், கோவை, சென்னையை சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. அதை யடுத்து, அக்கும்பலை கைது செய்ய, அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த, 21 முதல் கோவை, சென்னையில் முகாமிட்டு, ஆறு பேர் கொண்ட கும்பலை பிடித்து, சேலம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


மர்ம பெட்டி கண்டெடுப்பு: இந்நிலையில், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ஒட்டியுள்ள ஆயுதப்படை மைதானத்தின் ஒரு பகுதியில், நேற்று மாலை மரத்தாலான பெட்டியை, மர்ம நபர்கள் போட்டு விட்டு சென்றனர். அந்த பெட்டியில் இரிடியம் வைத்துள்ளதாக, கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். மாநகர வெடி குண்டு போலீசார், பெட்டியை சோதித்தபோது, விளக்கு போன்ற பொருளும், செம்பாலான வேதி பொருட்களும் இருந்தன. இந்த பெட்டியை இரிடியம் திருட்டு கும்பலே போட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X