| கருகும் சோளப்பயிர்கள்: விவசாயிகள் கவலை Dinamalar
கருகும் சோளப்பயிர்கள்: விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:57

அரூர்: அரூர் பகுதியில் சோளப்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டத்தில், போதியளவில், வடகிழக்கு பருவ மழை பெய்யாததால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் விவசாய கிணறுகள் வறண்டு போனதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பெய்த தொடர் கோடை மழையால், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், கால்நடைகளின் பசுந்தீவனத்துக்காக விவசாயிகள் நிலத்தை உழுது, சோளம் விதைப்பு செய்தனர். சிறிதளவு வளர்ந்த நிலையில், மழை பெய்யாததுடன், தற்போது, கடும் வெயில் அடிப்பதால், சோளப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், சோளம் விதைப்பு செய்த விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர்.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X