ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி | தர்மபுரி செய்திகள் | Dinamalar
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:59

இண்டூர்: ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதன் டிரைவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியை சேர்ந்தவர் வரதராஜ், 45. ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தோக்கம்பட்டியில் இருந்து, நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு, நத்தஹள்ளிக்கு சென்றார். நத்தஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, வரதராஜின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த வரதராஜ் சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த, நான்கு பேரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X