| குடிநீர் பிரச்னையை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் Dinamalar
குடிநீர் பிரச்னையை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
09:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு, கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், குடிநீர் பிரச்னையை தீர்க்காத, அ.தி.மு.க., அரசை கண்டித்தும், குடிநீர் பஞ்சத்துக்கு காரணமான உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.


ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தலைமை வகித்து பேசியதாவது: ஆளும் கட்சியினர் குடிமராமத்து பணிக்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கி, எந்த பணியையும் செய்யவில்லை. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 சதவீதம் தண்ணீர் பிரச்னை இல்லாததற்கு முழு காரணம், தி.மு.க., கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தான். அதையும் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லாமல் போனதால், தற்போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கிருஷ்ணகிரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர், 50 கோடி ரூபாய்க்கு திட்டத்தை அறிவித்தார். அதில் ஒன்று கூட செயல்படுத்தவில்லை. யாகம் நடத்தினால் தண்ணீர் வருமா? தற்போது பருவ மழை காலம் துவங்கியுள்ளதால், மழை வரும். யாகம் நடத்தியதால் தான் மழை வந்தது என, கூறவே இந்த நாடகத்தை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X