| மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் Dinamalar
மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
09:09

ஓசூர்: பேரிகை அருகே, மணல் கடத்திய இரு டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர்களை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார், மிடுதேப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, தலா ஒரு யூனிட் மணல் இருந்தது. விசாரணையில், உரிய அனுமதியின்றி மிடுதேப்பள்ளியில் இருந்து பேரிகைக்கு மணல் எடுத்து சென்றது தெரிந்தது. இரு டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர்களான மிடுதேப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 22, கொத்தூரை சேர்ந்த சம்பத்குமார், 34, ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X