| போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்: கரூர் நூலகத்தில் விண்ணப்பம் வழங்கல் Dinamalar
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்: கரூர் நூலகத்தில் விண்ணப்பம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
10:20

கரூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்கவுள்ள, குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம், கரூர் மாவட்ட மைய நூலகத்தில் வரும் ஜூலை மாதம் துவங்குகிறது.


இதுகுறித்து, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஜூலை மாத துவக்கத்தில் துவங்க உள்ள இப்பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல், ஞாபகம் வைத்திருத்தல் போன்ற பயிற்சிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல், பயிற்சி தேர்வுகள், தேர்வுக்கு தேவையான பாடங்களை கண்டறிய வைக்க வகுப்புகள் நடத்தப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல், மாவட்ட மைய நூலகம், 2, பிரம்ம தீர்த்தம் சாலை, திருவள்ளுவர் மைதானம் பின்புறம், கரூர் - 639001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, வரும் ஜூலை, 4ம் தேதிக்குள் வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04324- 263550 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X