| குப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி! Dinamalar
குப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி!
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
23:32

குப்பை தேக்கம்ரத்தினபுரி, 48வது வார்டு, முத்துக்குமார் நகர், ஐந்தாவது வீதியில் கடந்த ஒரு வாரமாக குப்பை தேங்கியுள்ளது.- கிருஷ்ணா, ரத்தினபுரி.

வீணாகும் குடிநீர்பேரூர், ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் அருகில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் வீணாகிறது.- செந்தில்குமார், பேரூர்.

அரைகுறை பணிசிட்ரா, ஏர்போர்ட் ரோடு, 36வது வார்டு, கருப்புசாமி நகரில் குப்பை சேகரிக்கும்போது, பாதியை சாலையிலே கொட்டி விட்டு செல்கின்றனர்.- சுந்தர், சிட்ரா.

சாஸ்திரி வீதியில் மின்கம்பம் விழும்பீளமேடு, 37வது வார்டு, சாஸ்திரி வீதியில் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.- செல்வக்குமார், பீளமேடு.

கள்ளிமடையில் குப்பைமலைசிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை, 63வது வார்டு, காமாட்சிஅம்மன் கோவில் பின்புறம் மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.- கார்த்திக், சிங்காநல்லுார்.

குடிநீர் வீண்ஒலம்பஸ், பாரதிநகர், முதலாவது வீதியில் சிலர் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வீண் செய்கின்றனர்.- அருள், ஒலம்பஸ்.

சுகாதாரக்கேட்டால் துர்நாற்றம்சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சென்ரல் பார்க் டவுன் அருகே குவிந்துள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.- ராஜ், இடிகரை.

தெருவிளக்கு பழுதுஆவாரம்பாளையம், 40வது வார்டு, ஏழாவது வீதியில், என்.ஜெட் 125 எண் கொண்ட தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை.- விஜயகுமார், ஆவாரம்பாளையம்.

பாரதிநகரில் கால்வாய் படுமோசம்ராமநாதபுரம், 74வது வார்டு, பாரதிநகர், மூன்றாவது வீதியில் குப்பை அடைத்து சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கிறது.- முருகேசன், ராமநாதபுரம்.

தார்சாலை வசதியில்லைவடவள்ளி, எஸ்.வி., நகர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாலை யில் ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.- ஜெகதீஷ், வடவள்ளி.

ஸ்ரீநகரில் சாக்கடை தேக்கம்பீளமேடு, ஹோப்காலேஜ், ஸ்ரீநகர், மெட்ரோ பர்னிச்சர் கடையின் பின்புறம் சாக்கடை கால்வாய் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது.- சங்கர், பீளமேடு.

ஒருமாதமாக வீணாகிறதுகவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பனி பேருந்து நிலையம் அருகில் கடந்த ஒரு மாதமாக குழாய் உடைந்து நீர் வீணாகிறது.- பாலசந்தர், கவுண்டம்பாளையம்.

விளாங்குறிச்சியில் வெளிச்சமில்லைவிளாங்குறிச்சி, குறிஞ்சிமாநகர், ராஜேஸ்வரி நகரில் தெருவிக்குகள் எரியாததால், இரவில் நடமாடவே அச்சமாக உள்ளது.- மணி, விளாங்குறிச்சி.

வெயில், மழையில் பயணிகள்ஒண்டிப்புதுார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடை இல்லாததால், மழை, வெயிலில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.- கண்ணன், ஒண்டிப்புதுார்.

சுகாதாரமற்ற குடிநீர்விளாங்குறிச்சி ரோடு, செந்தில் வேலவன் நகரில் சாக்கடை கால்வாயினுள் குழாய் வருவதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது.- உசேன், செந்தில் வேலவன் நகர்.

நடைபாதை ஆக்கிரமிப்புசிங்காநல்லுாரில் வாகனங்களை நிறுத்தியும், கடைகளின் விளம்பர பதாகைகள் வைத்தும், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.- ராஜாராணி, சிங்காநல்லுார்.

விபத்து இலவசம்ஒண்டிப்புதுார், பட்டணம் புதுாரில் சேதமடைந்த சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது.- சதீஷ், ஒண்டிப்புதுார்.

நாச்சிபாளையத்தில் சேதமடைந்த ரோடுநாச்சிபாளையம், அரிசிபாளையம், கிரீன்கார்டன், பேஸ் 2 குடியிருப்பு பகுதிகளில், சேதமடைந்த சாலையை செப்பனிட வேண்டும்.- அப்பாஸ், நாச்சிபாளையம்.

வேகத்தடை வேண்டும்சவுரிபாளையம் - பீளமேடு ரோட்டில், மாரியம்மன் கோவில் அருகே நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- கணேசன், சவுரிபாளையம்.

மண்சாலையான தார்சாலைமகாவீர் நகரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை முழுவதுமாக சேதமடைந்து மண்சாலையாகி விட்டது.- வெங்கடேசன், வடவள்ளி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X