| போலீஸ் செய்திகள்... Dinamalar
போலீஸ் செய்திகள்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:28

புகையிலை பறிமுதல் வத்திராயிருப்பு:வத்திராயிருப்பில் பல இடங்களில் அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,பால்வண்ணநாதன் பள்ளி பகுதி கடைகளில் சோதனை நடத்தினார். பிரபாகரன் கடையில் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 228 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது. இளைஞர் தற்கொலைசிவகாசி:சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் 27. அச்சக தொழிலாளியான இவர் திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான மலர் 42, என்பவரை திருமணம் செய்தார்.



இதற்கு வடிவேலுவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனைவி மலர் சிவகாசி வந்து குடும்பம் நடத்த மறுத்துள்ளார். விரக்தியடைந்த வடிவேல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.டிரைவரை தாக்கியவர் கைதுவிருதுநகர்: விருதுநகர் கே.உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் 41. அரசு போக்குவரத்து கழக டிரைவர். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியபேராலிக்கு பஸ் ஓட்டினார். சின்னபேராலி கண்மாய் வளைவில் வந்த போது ரோட்டில் டூவிலரை நிறுத்தியப்படி சின்னபேராலி வினோத் 23, நின்று கொண்டிருந்தார்.



ராஜேஷ் கண்ணன் 'ஓரமாக நிற்க வேண்டியதுதானே' என கூறி உள்ளார். ஆத்திரமடைந்த வினோத் டிரைவரை தாக்கினார். ஊரக போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில் பதுக்கியவர் கைதுராஜபாளையம்:ராஜபாளையம் அருகே இனாம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் கமலசேகரன் 29. ராஜபாளையம் மீனாட்சி தியேட்டர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். தெற்கு எஸ்.ஐ., லிங்குசாமி ,32 பாட்டில்களை கைப்பற்றி கைது செய்தார்.வேலைக்காக பணம் மோசடி


விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர்.நகர் ராமகுடும்பன்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் கருப்பசாமிக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை ஆடம்பாக்கத்தை சேர்ந்த பத்மநாபன் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பெற்றார். வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தார். வச்சக்காரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X