எப்பதான் முடிக்க போறீங்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:32

சிவகாசி : சிவகாசி சேர்மன் சண்மும் நாடார் ரோட்டில் வாறுகால் அமைக்கும் பணிக்கு இரு ஆண்டுக்கு முன்பே நிதி ஓதுக்க தற்போதுதான் பணியை துவக்கி உள்ளனர்.இதுவும் ஆமை வேகத்தில் நடப்பதால் சிவகாசி மக்கள் தினமும் சிரமத்தை சந்திக்கின்றனர்.சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் 3 பள்ளிகள் உள்ளன. இங்கு மட்டும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.



மேலும் இவ்வழியாகத்தான் நகரிலுள்ள மற்ற பள்ளிகளுக்கும் மாணவர்கள் செல்கின்றனர். காலை நேரத்தில் மட்டும் இந்த ரோட்டில் மாணவர்களை பள்ளியில் விடுவதற்காக பெற்றோர்கள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட டூ வீலர்களில் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது ரோட்டில் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடும் இதுவரை சீரமைக்கப்பட வில்லை. மாணவர்கள் மட்டுமல்லாது இவ்வழியே செல்வோரும் சிரமப்படுகின்றனர்.



இதே ரோட்டில் வாறுகால் அமைக்க இரு ஆண்டுக்கு முன்பே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இருந்தும் பணியை துவக்காது அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். வாறுகால் பணி முடிந்தால்தான் ரோடு அமைக்கும் பணி நடக்கும் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் வாறுகால் பணியை துவங்கி உள்ளனர். தொடர்ந்து பணிகள் நடந்தாலும் ஆமைவேகத்தில் நடப்பதால் பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சைக்கிளில் வருபவர்கள் தினமும் கீழே விழுகின்றனர். சிறிய மழை பெய்தாலும் இப்பகுதியில் யாருமே நடமாட முடியாது. வாறுகால் அமைக்கும் பணியினை விரைந்து முடித்து ரோட்டினை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. \



சமூக ஆர்வலர் ராஜூ: ''நிதி ஒதுக்கப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆன பிறகு வறுகால் பணியினை துவக்கியிருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. யார் என்ன செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். குழாய் பதிக்கும் பணியினை பள்ளி திறக்கும் நேரத்தில் துவக்கி, பள்ளியை மூட வைத்தனர். வருங்காலங்களிலாவது இதுபோன்று அலட்சியமாக இல்லாமல் மக்கள் நலனில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்,''என்றார்.



நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வாறுகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு வாரத்திற்குள் பணி முடிந்து விடும். அதன் பின் புதிய ரோடு அமைக்கும் பணி நடைபெறும்,''என்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X