'வேகத்தை கொன்றுவிடு...' அவிநாசியில் தினமும் நடக்குது விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜூன்
2019
02:11
பதிவு செய்த நாள்
ஜூன் 26,2019 00:34

வளர்ந்து வரும் நகரான அவிநாசியின் அனைத்து ரோடுகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. இரு மற்றும் நான்கு சாக்கர வாகனங்கள் சென்று வந்த வண்ணமே உள்ளன. அதுவும், பல வாகன ஓட்டிகள் அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டுகின்றனர்.குறிப்பாக, மங்கலம் ரோடு, சேவூர் ரோடுகளில், வாகன போக்குவரத்து அதிகம் இருப்பினும், சில வாகன ஓட்டிகளின் அசுர வேக பயணம், விபத்தை ஏற்படுத்துகிறது; இது, உயிரிழப்பை கூட ஏற்படுத்துகிறது.


வாகனங்களை ஓட்டுவதில் காட்டும் வேகம், விபத்தில்லாமல் ஓட்ட வேண்டும் என்ற விவேகம், வாகன ஓட்டிகளிடம் இருப்பதில்லை.நேற்று முன்தினம் மாலை, மங்கலம் ரோடு மற்றும் சேவூர் ரோட்டில் கொங்கு கலையரங்கம் அருகே என, ஆங்காங்கே விபத்து ஏற்பட்டது. இரண்டு டூவீலர் ஓட்டிகள் நேருக்கு நேர் மோதி கொண்டனர். ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதிய சம்பவமும் நடந்தது.அடிப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்க, தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் அங்குமிங்கும் 'சைரன்' எழுப்பியபடி பயணித்தது, மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.விபத்து விவகாரத்தில், அவிநாசி போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் அவசியம். தினமும், 60க்கும் மேற்பட்ட புதிய இரு சக்கர வாகனங்கள், அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.



காலை தரையில் வைக்காமல், '8' வடிவத்தில் டூவீலரை ஓட்டி காண்பித்துவிட்டால், அவர்கள் அவ்வாகனம் ஓட்ட தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் லைசென்சும் வழங்கப்பட்டு விடுகிறது.ஆனால், அதே வாகன ஓட்டிகள், ரோடுகளில் சாலை விதியை மதிக்காமலும், அசுர வேகத்திலும் பயணித்து, விபத்துக்கு காரணமாகி விடுகின்றனர் என்பது தான், கசப்பான உண்மை.தாங்களாகவே டூவீலர் ஓட்ட கற்றுக்கொள்பவர், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு சென்று கற்றுக்கொள்பவர் என, இரு தரப்பினராலும் விபத்து நடக்கிறது. எனவே, லைசென்ஸ் வழங்குவதற்கு முன், கிராம, நகர்புற ரோட்டின் தன்மை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரோடுகளில் எந்த வேகத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அறிவுரை, விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.


சாலை போக்குவரத்து விதிப்படி, ஒவ்வொரு ரோடுகளிலும், அவற்றின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட வேகத்தில் தான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற வேக அளவீடு நடைமுறையில் உள்ளது. அந்த வேகத்தை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இத்தகைய முன்னேற்பாடுகள் செய்யாத பட்சத்தில், சாலை விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவது கடினமே.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X