போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:49

கூடுதல் வசூல்செம்பட்டி தனியார் இரு சக்கர வாகன காப்பகங்களில், கட்டண நிர்ணய போர்டு அமைக்கவில்லை. விருப்பம்போல, கூடுதல் கட்டண வசூல் நடப்பதால், வெளியூர் பயணிகள் பாதிப்படைகின்றனர்.- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜி.சக்திவேல், கோடாங்கிபட்டி.---ஆக்கிரமிப்பு அவதிதருமத்துப்பட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால், வாரச்சந்தையின் வெளிப்புறத்திலும் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகிறது. செம்பட்டி - -பழநி ரோடு அகலம் குறுகி வாகன விபத்துகள் தொடர்கிறது.- நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.ராகவன், தருமத்துப்பட்டி.---பயன்பாடற்ற நிழற்கூரை கொடைரோடு பஸ் ஸ்டாப்பில் மெயின்ரோட்டில் உள்ள நிழற்கூரை கட்டடத்தில், வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். பயணிகள், பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது.- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.சுந்தரவதனன், ராஜதானிக்கோட்டை.---சேதமடைந்த ரோடுபழநி அண்ணாநகர் டான்ஸி நிறுவனத்தின் பின்புறம் சந்து பகுதியில் ரோடு அமைத்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாதி அமைத்து பணியை நிறுத்திவிட்டனர் போலும். முற்றிலும் சேதமடைந்த ரோடால் இப்பகுதியை பயன்படுத்தும் 4 தெரு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.-கண்ணன், பழநிநாய்கள் அதிகரிப்புதிண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. சமீபகாலமாக 3 இடங்களில் நாய்க்குட்டிகள் அதிகரித்து ரோடு முழுவதும் நாய்களாகவே காட்சியளிக்கின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் இதை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் விரைவில் ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்பட்டால்தான் அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களோ.-சுந்தரகண்ணன், திண்டுக்கல்.மூடப்பட்ட வாய்க்கால்அனுமந்தராயன் கோட்டை அருகே அலவாச்சிபட்டியில் இருபுறமும் வரத்து வாய்க்காலில் கழிவுகளை குவிக்கின்றனர். வாய்க்கால் மூடப்பட்டதால், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கும் நிலை உள்ளது.- பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.க்ஷ-எம்.செல்வக்குமார், அலவாச்சிபட்டி.----ரோட்டில் பாதிப்புகுட்டத்துப்பட்டி - -கன்னிவாடி ரோடு ஆக்கிரமிப்புகளால் அகலம் குறுகி வருகிறது. கனரக வாகனங்கள் எதிரே வரும்போது, இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.--கே.ஜம்புலிங்கம், மேலத்திப்பம்பட்டி.---தெருவிளக்கு தேவைஅம்மையநாயக்கனுார் ராமராஜபுரத்தில் சுகாதார வளாக பகுதியில் தெருவிளக்கு இல்லை. இப்பகுதியை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இரவில் நடமாட அச்சப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும்.-டி.குருசாமி, ராமராஜபுரம்.----

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X