| துவக்கம் Dinamalar
துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:50

குஜிலியம்பாறை : கிராம சாலைகளை அகலப்படுத்தி, முறையான தார்சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதால், அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கி, குறைந்த அகலம் கொண்ட கிராமப்புற சாலைகளையும் அகலப்படுத்தி தரமான சாலைகளாக மாற்றி வருகிறது.



இத்திட்டத்தின் கீழ் மூன்றே முக்கால் மீட்டர் அகலமுள்ள கிராமப்புற தார் சாலைகள், ஐந்தரை மீட்டர் அகலமுள்ள தார் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் இப்பணிகள் நடக்க உள்ளன.ரோட்டில் சோதனைஇவ்வாறு ரோட்டை அகலப்படுத்தும் இடங்களில், போதுமான ஆழத்திற்கு குழியை நீளவாக்கில் தோண்டி, ஜல்லிக்கற்கள் கொட்டி, ரோட்டை இயந்திரங்களை கொண்டு பலமாக அழுத்தி புதிய ரோட்டை அமைக்கின்றனர். ரோடு அமைக்கும் இடங்களில் ஆங்காங்கே 'ட்ரில்லிங்' (குழி துளைத்து) சோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.



தரம் உயரும்இவ்வாறு தரம் உயர்த்தும் வகையில், புளியம்பட்டியில் இருந்து கூம்பூர் வரை அமைப்பதற்காக, ரோட்டின் ஓரங்களில் மண் தோண்டி எடுக்கப்படுகிறது. இந்த மண் மதுரைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே நிலத்தின் தன்மையை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல், கோவிலுார் -- காசிப்பாளையம் மற்றும் வேடசந்துார் -- கோவிலுார் ரோடுகளும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X