ரூ.50 லட்சம் செலவில் கண்சிகிச்சை மையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:56

பழநி : பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் கண்சிகிச்சை மையம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.



பழநி அரசு மருத்துவமனைக்கு நகர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்கள், வெளியூர் முருக பக்தர்கள் என தினமும் பலஆயிரம் பேர் வருகின்றனர். இவர்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்த போதிலும்,. இதில் கண்நோய், பாதிப்பு சம்பந்தமாக கூடுதலாக வருகின்றனர். அவர்களுக்கு கண்பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்கு மதுரை, திண்டுக்கல், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



ஆன்மிக, சுற்றுலா தலமான பழநியில் கண்மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் நவீன அறுவை சிகிச்சை இயந்திரங்களுடன் புதிதாக சிகிச்சைமையம் அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்துள்ளனர். அரசுநிதி ஒதுக்கிய பின் கட்டுமானப்பணிகள் துவங்கும்.பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயசேகர் கூறுகையில், ''தற்போதுள்ள முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிகிச்சை மையம் அருகே புதிய சிகிச்சை மையத்திற்கு இடம் தேர்வு செய்துள்ளோம்.



முதல் தளத்துடன் 10 படுக்கை வசதிகள், அறைகள் கட்டப்படும். ரூ.25 லட்சம் கட்டுமான பணிக்கும், ரூ.25 லட்சத்தில் நவீன அறுவைசிகிச்சை இயந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்கவும் திட்டம் தயாராகியுள்ளது. நிதிகிடைத்ததும் பொதுப்பணித் துறை மூலம் பணிகள் நடைபெறும்'' என்றார்.-------

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X