ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரவுடிகள் மிரட்டியதால் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:56

புதுச்சேரி:புதுச்சேரி - கடலுார் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை, ரவுடி கும்பல் மிரட்டியதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.


கலெக்டர் அருண் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்ட முடிவின்படி, சாலையோர ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை புதுச்சேரி - கடலுார் சாலையில், வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து முதலியார்பேட்டை மரப்பாலம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் என பல நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பணித்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சியினர் ஜே.சி.பி., உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர். வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வரிசையாக வைக்கப்பட்டுள்ள ெட்டிகடைகள் மற்றும் பழக்கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அப்போது, காங் கட்சியின் இளையராஜா தலைமையிலான கும்பல் தடுத்து நிறுத்தியது. போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்தனர்.அதன்பின், அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்பல், அதிகாரிகளிடம் , பெட்டி கடைகளுக்கு நகராட்சியிடம் வரி செலுத்துவதாகவும், கடைகளை எப்படி அகற்ற முடியும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.முதலியார்பேட்டை ரயில்வே கேட்டில் இருந்து இந்தியன் வங்கி வரை ஏ.எப்.டி.மில் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்ற ரவுடி கும்பல் கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தது. மூன்று போலீசார் மட்டுமே உடன் இருந்தால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தொடர முடியாமல், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர்.


இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.ரவுடிகள் மாமூல் வசூல்புதுச்சேரி-கடலுார் சாலையில், சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெட்டி கடைகள் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு ரவுடிகள் தினசரி வாடகை வசூலித்து வருகின்றனர். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றினால், தங்களின் வருமானம் பாதிக்கும் என்பதால், பொதுப்பணி மற்றும் நகராட்சி அதிகாரிகளை ரவுடி கும்பல் மிரட்டி விரட்டியடித்தனர். போலீசாரும் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி கொண்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
02-ஜூலை-201918:59:08 IST Report Abuse
vasanthan இந்த வேலையே கூட கிரண் பேடி தான் செய்யவேண்டும் . அந்த ஏரியா கௌன்சிலர், M L A , நாராயண சாமி இவர்கள் என்ன செய்கிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
02-ஜூலை-201918:57:05 IST Report Abuse
vasanthan கிரண் பேடி எதாவது நல்லது செய்தலே ரௌடிகளின் தலைவர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் உடனே நாராயண சாமி ஊளையிடா அராபிக்கின்றார்.
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
26-ஜூன்-201907:29:39 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் ரௌடிகளின் கையில் தான் இருக்கிறதா ? இதையெல்லாம் கவர்னர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் கண்டுகொள்ளுவதில்லையா ரௌடிகள் யாரால் அனுப்பப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்திட காவல்துறை ஏன் தயக்கம் காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X