| ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரவுடிகள் மிரட்டியதால் நிறுத்தம் Dinamalar
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரவுடிகள் மிரட்டியதால் நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:56

புதுச்சேரி:புதுச்சேரி - கடலுார் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை, ரவுடி கும்பல் மிரட்டியதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.


கலெக்டர் அருண் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்ட முடிவின்படி, சாலையோர ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை புதுச்சேரி - கடலுார் சாலையில், வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து முதலியார்பேட்டை மரப்பாலம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் என பல நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பணித்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சியினர் ஜே.சி.பி., உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர். வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வரிசையாக வைக்கப்பட்டுள்ள ெட்டிகடைகள் மற்றும் பழக்கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அப்போது, காங் கட்சியின் இளையராஜா தலைமையிலான கும்பல் தடுத்து நிறுத்தியது. போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்தனர்.அதன்பின், அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்பல், அதிகாரிகளிடம் , பெட்டி கடைகளுக்கு நகராட்சியிடம் வரி செலுத்துவதாகவும், கடைகளை எப்படி அகற்ற முடியும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.முதலியார்பேட்டை ரயில்வே கேட்டில் இருந்து இந்தியன் வங்கி வரை ஏ.எப்.டி.மில் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்ற ரவுடி கும்பல் கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தது. மூன்று போலீசார் மட்டுமே உடன் இருந்தால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தொடர முடியாமல், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர்.


இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.ரவுடிகள் மாமூல் வசூல்புதுச்சேரி-கடலுார் சாலையில், சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெட்டி கடைகள் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு ரவுடிகள் தினசரி வாடகை வசூலித்து வருகின்றனர். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றினால், தங்களின் வருமானம் பாதிக்கும் என்பதால், பொதுப்பணி மற்றும் நகராட்சி அதிகாரிகளை ரவுடி கும்பல் மிரட்டி விரட்டியடித்தனர். போலீசாரும் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி கொண்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X