| தொழிலாளர் ஆர்ப்பாட்டம் Dinamalar
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:57

பழநி : பழநி குளத்துரோடு ரவுண்டானா அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பழநி ஒன்றியச் செயலளர் முருகசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும். 100நாள் வேலையை 200நாளாக உயர்த்த வேண்டும்.



சின்னகலையம் புத்துார்- நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி-மானுார், நெய்க்காரப்பட்டி-பெருமாள்புதுாரில் புதிய ரோடு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஊர்வலமாக சென்று பழநி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.வேடசந்துார்: வேடசந்துாரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிக்கனன் தலைமை வகித்தார்.



தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் முனியப்யன் முன்னிலை வகித்தனர்.100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 150 நாட்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும். ரூ.229 சம்பளமாக வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் பிச்சைமுத்து, சி.எஸ்.முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X